ADDED : ஏப் 18, 2024 12:24 AM

சென்னை, ராம நவமியை முன்னிட்டு, இல்லங்களில் ராமபிரான் படம், சிலைகளுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. நைவேத்தியமாக வடை பருப்பு, பானகம், நீர் மோர் வைத்து படைத்து, அக்கம் பக்கத்தினருக்கு பிரசாதங்களை வழங்கினர்.
நங்கநல்லுாரில் அமைந்துள்ள, 32 அடி உயர ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீ ராம நவமி விழாவில் ராமர் சன்னிதியில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தான தி.நகர் பெருமாள் கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நேற்று காலை ஆஸ்தானம் எனும் வழிபாடு நடந்தது.
இதில், ஆராதனை, வஸ்திர பிரதக்ஷனம் சமர்ப்பணம் நடந்தது. மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், நேற்று காலை 7.00 மணி முதல் ஸ்ரீ ராம ஸஹஸரநாமம், அஷ்டோத்திரம், ஸ்ரீ சீதா, லஷ்மி, ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் நடைபெற்றது.
அசோக் நகர் ஆஞ்நேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வெள்ளி கவச தரிசனம் நடந்தது. மாலை வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
மடிப்பாக்கம், ராமர் கோவிலில்,நேற்று மாலை முதல் பூமாதேவி, ஒப்பலியப்பன், ஸ்ரீராமர் திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், மங்களகிரி திருவீதி புறப்பாடு நடந்தது.
சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.

