/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக படகு போட்டி அணியில் ராமச்சந்திரா மாணவர்கள்
/
உலக படகு போட்டி அணியில் ராமச்சந்திரா மாணவர்கள்
ADDED : மே 17, 2024 11:45 PM

சென்னை:உலக படகுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், போரூர் ராமச்சந்திரா பல்கலை மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பன்னாட்டு பல்கலை விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், பல்கலைகளுக்கு இடையிலான உலக படகுப் போட்டி, நெதர்லாந்தில், வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.
இப்போட்டியில், இந்திய உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பங்கேற்கும் அணியில், போரூர் ராமச்சந்திரா பல்கலையின் மூன்று மாணவர்களான ஏக்ஷித் சாய், ரோல் மஸ்திகா, தமிழ்செல்வி மற்றும் மூத்த பயிற்சியாளர் பாஸ்கர் ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் பயிற்சியாளரை பாராட்டிய ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கடாசலம், அவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில், துணைவேந்தர் உமாசேகர், இணைவேந்தர் மகேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

