/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தையில் 'ரெடிமேட்' கால்வாய்
/
கோயம்பேடு சந்தையில் 'ரெடிமேட்' கால்வாய்
ADDED : ஆக 08, 2024 12:35 AM
சென்னை, கோயம்பேடு அங்காடி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் இருந்த சி.எம்.டி.ஏ., மற்றும் அங்காடி நிர்வாக குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில், போதிய கொள்ளளவில் மழை நீர் கால்வாய்கள் இல்லை.
மழைக்காலத்தில் சாலைகள் வெள்ள காடாக மாறுகின்றன. இதனால், இங்கு தேங்கும் வெள்ள நீரை கூவத்தில் விடுவதற்கு ஏற்ப, வடிகால் அமைக்கதிட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரெடிமேட் முறையில் கான்கிரீட்டால் தயாரிக்கப்பட்ட அமைப்புகளை பயன்படுத்தி மழை நீர் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் வழியாக மழை நீரை கூவத்தில் விடும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.