ADDED : ஆக 12, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:வேளச்சேரி ரயில்வே மேம்பாலம், 100 அடி அகலம் உடையது. கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், இந்த மேம்பாலம் வழியாக பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.
மேம்பாலம் கட்டி முடித்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மழைநீர் வடிந்து குழாய் வழியாக கீழே செல்லும் வகையில், வடிகட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றில், மண், கற்களால் அடைப்பு ஏற்பட்டது. பக்கவாட்டு நடைபாதையும் சேதமடைந்து, சிலாப் உள்வாங்கி இருந்தது.
மழை பெய்தால் மேம்பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
குழாய் அடைப்பு நீக்குவது, நடைபாதை சிலாப் புதுப்பிப்பது, நடைபாதை பக்கவாட்டு கைப்பிடி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.