/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பில் இருந்த திறந்தவெளி நிலம் மீட்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த திறந்தவெளி நிலம் மீட்பு
ADDED : ஏப் 09, 2024 12:32 AM

ஜாபர்கான்பேட்டை, மேற்கு ஜாபர்கான்பேட்டை அஞ்சுகம் நகரில், ஆக்கிரமிப்பில் இருந்த திறந்தவெளி நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு மேற்கு ஜாபர்கான்பேட்டையில், அஞ்சுகம் நகர் உள்ளது. இந்த நகர் உருவாக்கப்பட்ட போது, 8,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து, அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், சில ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சியில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைய இருந்த நிலையில், அதை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தற்போது, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, அது திறந்தவெளி நிலம் என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள், அந்த இடத்தில்,'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை வைத்தனர்.

