/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு
/
அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு
ADDED : மே 09, 2024 12:20 AM
எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ஆர்., நகர் கபிலர் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 22; பெயின்டர். இவருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணமானது.
பிரகாஷ் மதுவிற்கு அடிமையானதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இரு வாரங்களுக்கு முன், மனைவி சங்கீதா சண்டை போட்டுக் கொண்டு, திரிசூலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், பிரகாஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர், நேற்று மதியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து, உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இறந்த பிரகாஷ், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் சி பிரிவு ரவுடி என, அடையாளப்படுத்தப்பட்டவர்.