/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உறவினர்கள்
/
பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உறவினர்கள்
பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உறவினர்கள்
பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உறவினர்கள்
ADDED : ஆக 30, 2024 12:37 AM
பூந்தமல்லி,
பூந்தமல்லி, திருமால் நகரைச் சேர்ந்த சேகர் என்பவரது மனைவி ஜெயந்தி, 45. இவர் நேற்று முன்தினம் இரவு, உணவு சாப்பிட்ட பின் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு ஜெயந்தியை அழைத்துச் சென்று பரிசோதித்த போது, ஜெயந்தி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
போலீசார் அங்கு வந்து, ஜெயந்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
ஆனால், ஜெயந்தியின் உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு ஜெயந்தி உடலை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, உடலை காரில் ஏற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து, ஜெயந்தி வீட்டிற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.