ADDED : மார் 06, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர் ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி, அணுகு சாலையில், 6 கி.மீ., துாரத்தில், 25 ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் அதிகரித்தது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்த கடைகளை அகற்ற, கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று 15 கடைகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள கடைகள் அகற்றப்படும்; போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்கள் அகற்றப்படும் என, போலீசார் கூறினர்.