/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவேற்காடு கோலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
திருவேற்காடு கோலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவேற்காடு கோலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவேற்காடு கோலடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஆக 30, 2024 12:49 AM

திருவேற்காடு, சென்னை, திருவேற்காடு, சன்னதி தெருவில் புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினமும் வந்து செல்கின்றனர்.
திருவேற்காடு கோவிலை ஒட்டியுள்ள, திருவேற்காடு தேரடி சாலையின் இருபுறமும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலமுறை புகார் அளித்தனர்.
இதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற, திருவேற்காடு நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று காலை முதல் மதியம் வரை, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், கோலடி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருவேற்காடு பேருந்து நிலையம் முதல், கோலடி சுடுகாடு வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைத்திருந்த பெயர் பலகை, தற்காலிக கூரை போன்றவற்றை, 'பொக்லைன்' வாயிலாக அகற்றினர்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

