/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி அருகே குவித்த குப்பை அகற்றம்
/
பள்ளி அருகே குவித்த குப்பை அகற்றம்
ADDED : ஆக 05, 2024 01:16 AM

அசோக் நகர், கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு அசோக் நகர், திருநகர், கபிலர் தெருவில் அரசு உதவிபெறும் எம்.ஏ.கே., உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 600 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி, அப்பகுதிகளில் சேகரமாகும் குப்பை மாநகராட்சி சார்பில் குவிக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பின் அப்புறப்படுத்துவது வாடிக்கை.
பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி குப்பை கொட்டுவதால், துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்த குப்பையில் இருந்து பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகியவை, பள்ளி வளாகத்திற்குள் புகுந்தன.
மேலும், 'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் குப்பையை அள்ளும் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழும் என்ற அச்சம் நிலவியது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி சுற்றுச்சுவர் அருகே குவிக்கப்பட்ட குப்பை அகற்றப்பட்டது. மேலும், தொடர்ந்து அங்கு குப்பை கொட்டக்கூடாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.