ADDED : ஜூலை 13, 2024 12:46 AM

அண்ணா நகர், சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில், வைக்கப்படும் பிரமாண்ட 'கட் அவுட்' மற்றும் பேனர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதை அடுத்து, நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவு பிறப்பித்தன. இதனால், உடனே பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், நாளடைவில்அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் விளம்பர பேனர்கள் ஆங்காங்கே முளைத்தன. குறிப்பாக, அண்ணா நகர் பகுதியில், பேனர் கலாசாரம் தலைதுாக்கியது.
அண்ணா வளைவு மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில் ஏராளமான ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மேம்பாலத்தின் மேல் பகுதியில் பிரமாண்ட ராட்சத பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், பேனர்களை தாங்கி பிடிக்கும் இரும்பு கம்பிகள் அப்படியே உள்ளன. இதனால், மீண்டும் பேனர்கள் வைக்கப்படும் என்பதால், அண்ணா ரவுண்டனா, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் இரும்பு கம்பிகளையும் அகற்றி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.