/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலை முழுமையாக கட்ட வேண்டுகோள்
/
வடிகாலை முழுமையாக கட்ட வேண்டுகோள்
ADDED : ஜூலை 16, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடிகாலை முழுமையாக கட்ட வேண்டுகோள்
பெருங்குடி மண்டலம் வார்டு 188, மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு, லட்சுமி நகர் 7வது தெருவில் துவக்கப்பட்ட வடிகால் பணி, நான்கு மாதங்களுக்கு முன் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால், எஞ்சியுள்ள வடிகால் பள்ளத்தில் நீர் தேங்கி, சாக்கடையாக மாறிவிட்டது. தவிர, முக்கிய வளைவில் இந்த வடிகால் பள்ளம் உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து காயமடைகின்றனர்.
வடிகால் பணியை முழுமையாக முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ்ராஜ், 35,
லட்சுமி நகர், மடிப்பாக்கம்.

