/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாடாவதி மினி பஸ்கள் பராமரிக்க வேண்டுகோள்
/
பாடாவதி மினி பஸ்கள் பராமரிக்க வேண்டுகோள்
ADDED : செப் 18, 2024 12:42 AM

சென்னை,
சென்னையில் மாநகர போக்குவரத்து பற்றாக்குறை ஏற்படும் இடங்களில், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
புறநகரில், முகலிவாக்கம், குன்றத்துார், தாம்பரம், பல்லாவரம், அஸ்தினாபுரம், பொழிச்சலுார் உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுகின்றன.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், மினி பஸ் இயக்கப்படுவதில்லை.
அந்த வகையில், சென்னை, புறநகரில், 200க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால், பேட்டரியில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, சாலையில் ஓரங்கட்டப்படுகின்றன.
குறிப்பாக, அதிகளவு புகையை வெளியேற்றுவதால், காற்று மாசும் ஏற்படுகிறது.
பாடாவதியான மினி பஸ்களை முழுமையாக பராமரித்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

