/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டீ கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு 'காப்பு'
/
டீ கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு 'காப்பு'
டீ கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு 'காப்பு'
டீ கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : பிப் 27, 2025 12:43 AM
கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சாமியார்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 36. இவர், கொருக்குப்பேட்டை, இளைய தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார்.
செந்தில்குமார் நேற்று டீ கடையில் இருந்தபோது, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஈஸ்வரன், 23, என்பவர், மதுபோதையில் வந்து மாமூல் கேட்டு மிரட்டினார்.
அப்போது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவர், ஏன் இங்கு பணம் கேட்டு பிரச்னை செய்கிறாய் என கேட்க, மாதவனை, ஈஸ்வரன் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
காயமடைந்த மாதவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசில் செந்தில்குமார் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை, வீராகுட்டி தெருவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஈஸ்வரனை கைது செய்தனர்.