/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு
/
உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு
ADDED : ஆக 24, 2024 12:26 AM

சென்னை, தி.நகர், கோபால் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 58; காவலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 55. இவர்களது மகன் கிஷோர்குமார், 26; தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று காலை ராமகிருஷ்ணன் பணிக்கு சென்ற நிலையில், ராஜலட்சுமியும் கிேஷார்குமாரும் வீட்டில் இருந்துள்ளனர்.
மதியம், 1:00 மணியளவில், வீட்டில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு படுக்கை அறையில் ராஜலட்சுமியும், கிஷோர்குமாரும் கருகிய நிலையில் கிடந்துள்ளனர். மாம்பலம் போலீசார், உடல்களை மீட்டனர்.
வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. ஆனால் மண்ணெண்ணெய் வாசனையும், மொபைல் போன் எரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளன. இதனால், தற்கொலையா அல்லது தீ விபத்தில் உயிரிழந்தார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

