/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு
/
ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு
ADDED : ஏப் 05, 2024 12:15 AM

சென்னை,மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, தேசிய தகவல் மையத்தில் இருந்து, சென்னையில் உள்ள கடலோர காவல் படை வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினம் துறைமுகம் அருகே, ஆழ்கடலில் படகு ஒன்று விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தேடுதல் வேட்டை நேற்று முன்தினம் இரவு, 11:55 மணியளவில், ஒன்பது மீனவர்களை மீட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்கள், சென்னை எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் 10 பேரும், மார்ச் 27ம் தேதி, மீன்பிடிக்க கடலுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

