/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி கால்வாய் சகதியில் இரவு முழுதும் சிக்கியவர் மீட்பு
/
வேளச்சேரி கால்வாய் சகதியில் இரவு முழுதும் சிக்கியவர் மீட்பு
வேளச்சேரி கால்வாய் சகதியில் இரவு முழுதும் சிக்கியவர் மீட்பு
வேளச்சேரி கால்வாய் சகதியில் இரவு முழுதும் சிக்கியவர் மீட்பு
ADDED : மே 01, 2024 12:39 AM

வேளச்சேரி,
வேளச்சேரி ஏரியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 15 அடி அகல வீராங்கால் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை மூடு கால்வாயாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 95 சதவீதம் முடிக்கப்பட்டு, எஞ்சிய பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க நபர், பணி நடக்கும் திறந்தவெளி கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளார்.
இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கால்வாய் உயரமாக இருந்ததால் வெளியேற முடியாமலும், உதவிக்கு கூப்பிட முடியாத நிலையிலும், சகதியில் நின்று கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை, நடைபயிற்சி சென்றவர்கள் இவரை பார்த்து, வேளச்சேரி போலீசில் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர், அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவரின் இடுப்பில் கயிறு கட்டி, நீட்டிப்பு ஏணி வழியாக மீட்டனர்.
உடல் முழுவதும் சகதியாக இருந்ததால், தண்ணீரால் சுத்தப்படுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்கு பின் அவரை, காப்பகத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.