/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகரில் உள்வாங்கிய நடைபாதை விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
/
பெசன்ட் நகரில் உள்வாங்கிய நடைபாதை விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
பெசன்ட் நகரில் உள்வாங்கிய நடைபாதை விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
பெசன்ட் நகரில் உள்வாங்கிய நடைபாதை விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்
ADDED : ஜூலை 10, 2024 12:34 AM

பெசன்ட் நகர், அடையாறு மண்டலம் 179வது வார்டு, பெசன்ட் நகர், கங்கை தெரு 50 அடி அகலம் கொண்டது. இதில், மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைபாதை உள்ளது.
வடிகாலில், 30 அடி இடைவெளியில், துார்வாரும் வகையில், இயந்திர நுழைவாயில் அமைத்து மூடி அமைக்கப்பட்டது.
இந்த மூடி மற்றும் நடைபாதை உள்வாங்கி சேதமடைந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, உள்வாங்கிய மூடியை மாற்றிவிட்டு, புதிய மூடி போடப்பட்டது. ஆனால், உள்வாங்கிய நடைபாதை சீரமைக்கப்படவில்லை.
இதனால், இரவு வேளையில் முதியோர், குழந்தைகள் கவனக்குறைவாக தடுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, உள்வாங்கிய நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை கூறினர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படாத வகையில் அப்பகுதிவாசிகளே, வலை கட்டி மறைத்தனர். மேலும், நடைபாதை உள்வாங்கியதால், வடிகாலில் அடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டு, இயந்திர நுழைவாயில் வழியாக வெளியேறி, தெருக்களில் தேங்கும் நிலைமை உள்ளது.
எனவே மக்கள் நலனை கருத்தில் வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாயில் கட்டமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. உள்வாங்கிய நடைபாதையை சீரமைக்க, சில ஆயிரம் ரூபாய் தான் தேவைப்படும்.
இந்த நிதியை ஒதுக்க அதிகாரிகள் முன்வராதது வருத்தம் அளிக்கிறது. உள்வாங்கிய நடைபாதையில் விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு என, அதிகாரிகள் கூற வேண்டும்.
அபாயத்தை உணர்ந்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, உள்வாங்கிய நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.