/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொலிவிழந்த மாநகராட்சி பூங்கா கோயம்பேடுவாசிகள் அதிருப்தி
/
பொலிவிழந்த மாநகராட்சி பூங்கா கோயம்பேடுவாசிகள் அதிருப்தி
பொலிவிழந்த மாநகராட்சி பூங்கா கோயம்பேடுவாசிகள் அதிருப்தி
பொலிவிழந்த மாநகராட்சி பூங்கா கோயம்பேடுவாசிகள் அதிருப்தி
ADDED : மே 08, 2024 12:10 AM

கோயம்பேடு, கோயம்பேடில் பராமரிப்பின்றி, மோசமான நிலையிலுள்ள பூங்காவை புனரமைத்து, அங்குள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு கோயம்பேடு பிருந்தாவன் நகர் ரோஜா தெருவில், மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது.
இங்குள்ள சிறுவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போரும் இப்பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இந்த பூங்கா, முறையான பராமரிப்பின்றி, தற்போது மோசமான நிலையில் உள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு உபகரணங்களும் உடைந்துள்ளன. இதனால், சிறுவர்கள் விளையாட வழியின்றி, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் இங்கு சிலர், சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பூங்கா கோயம்பேடு சந்தை அருகே உள்ளதால், பூங்காவிற்கு அருகே மலை போல் குப்பை குவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் துர்நாற்றம் பரவி, பூங்காவிற்கு வரவே பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, இந்த பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையில், சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

