/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பஸ் மீண்டும் இயக்கம் செம்மஞ்சேரிவாசிகள் மகிழ்ச்சி
/
மாநகர பஸ் மீண்டும் இயக்கம் செம்மஞ்சேரிவாசிகள் மகிழ்ச்சி
மாநகர பஸ் மீண்டும் இயக்கம் செம்மஞ்சேரிவாசிகள் மகிழ்ச்சி
மாநகர பஸ் மீண்டும் இயக்கம் செம்மஞ்சேரிவாசிகள் மகிழ்ச்சி
ADDED : மே 05, 2024 12:14 AM
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து, கிண்டி, தி.நகர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திற்கு தடம் எண்: 99சி என்ற எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டது.
நுாக்கம்பாளையம், பொலினினி, பெரும்பாக்கம் பகுதியில், இந்த பேருந்து செல்ல வசதி குறைவாக இருந்ததால், சில ஆண்டுகளுக்குமுன் நிறுத்தப்பட்டது. இதனால், செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் பகுதிமக்கள், இரண்டு பேருந்துகள் ஏறி, சோழிங்கநல்லுார் சுற்றி செல்ல வேண்டி இருந்தது. பணி, அவசர வேலை நிமித்தமாக செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், பொலினினி, நுாக்கம்பாளையம் பகுதியில் சாலை வசதி சீரானதால், இந்த பேருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.
செம்மஞ்சேரியில் இருந்து முதல் பேருந்து, அதிகாலை 4:50 மணிக்கும், கடைசி பேருந்து, இரவு 8:20 மணி என, 45 நிமிடத்திற்கு ஒரு நடை வீதம் இயக்கப்படுகிறது. இதனால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.