/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரலி சு.நெல்லையப்பர் சிலைக்கு மரியாதை
/
பரலி சு.நெல்லையப்பர் சிலைக்கு மரியாதை
ADDED : மார் 29, 2024 12:20 AM
குரோம்பேட்டை, சுதந்திர போராட்ட தியாகி, கவிஞர், எழுத்தாளர், மகாகவி பாரதியாரின் சீடர் என, பன்முகம் கொண்டவர் பரலி சு.நெல்லையப்பர். குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டி, பரலி சு.நெல்லையப்பரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வழங்குவர்.
இந்தாண்டு, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைத்து தலைவர்களின் உருவச்சிலையை, தேர்தல் அதிகாரிகள் மூடினர். அதில், பரலி சு.நெல்லையப்பரின் சிலையும் ஒன்று.
இந்நிலையில், பரலி சு.நெல்லையப்பருக்கு, நேற்று, 53வது நினைவு தினம். இதையொட்டி, அதிகாரிகளின் அனுமதியோடு, சமூக ஆர்வலர்கள், அவரது சிலையை திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

