தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓய்வு பெற்ற ‘போஸ்ட் மாஸ்டர்’ அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

ஓய்வு பெற்ற ‘போஸ்ட் மாஸ்டர்’ அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

ஓய்வு பெற்ற ‘போஸ்ட் மாஸ்டர்’ அழுகிய நிலையில் சடலமாக மீட்பு


ADDED : ஆக 09, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர், உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வேளச்சேரி, டி.என்.எச்.பி., காலனியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 73. தபால் நிலையத்தில், போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, 2020ல் உயிரிழந்தார். மனைவியின் நினைவாக, அதே வீட்டில் தனியாக வசித்தார். இரண்டு மகள்கள் சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். ஒரு மகள் கடைசியாக, 2ம் தேதி நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில், நேற்று, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலில்படி மகள்கள் சென்று பார்த்தபோது, கோதண்டபாணி, அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். வேளச்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us