தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ரூபிக்ஸ் கியூப்' பயன்படுத்தி மணலி மாணவர்கள் சாதனை

'ரூபிக்ஸ் கியூப்' பயன்படுத்தி மணலி மாணவர்கள் சாதனை

'ரூபிக்ஸ் கியூப்' பயன்படுத்தி மணலி மாணவர்கள் சாதனை


UPDATED : ஆக 09, 2026 08:49 PM

ADDED : ஆக 09, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 08:49 PM ADDED : ஆக 09, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மணலி:மணலியில், 'ரூபிக்ஸ் கியூப்' பயன்படுத்தி, பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய மாணவர்கள், 'லிங்கன் புக் ஆப் ரெக்காட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

மணலி அடுத்த மாத்துார் தனியார் மண்டபத்தில், ஜீனியர்ஸ் அகாடமி மாணவர்கள், ரூபிக்ஸ் கியூப்புகளை சமன்படுத்தி, உலக சாதனை நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.

அதன்படி, மாணவி செல்சியா, குழந்தைகள் மற்றம் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, 140 ரூபிக்ஸ் கியூப்புகளை சமன்படுத்தி, 1098 என்ற உதவி எண்ணை, பலகையில் உருவாக்கினார்.

தருண் கிருஷ்ணா என்ற மாணவர்கள், ஐந்து நிமிடத்தில், 20 ரூபிக்ஸ் கியூப்புகளை சமன்படுத்தியபடி, 100 பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளித்தார். தனன்யா ஸ்ரீ என்ற மூன்றரை வயது சிறுமி, 120 ரூபிக்ஸ் கியூப்புகளை பயன்படுத்தி, அப்துல்கலாம் உருவத்தை வடிவமைத்தார்.

அதே போல், சிலம்பம் சுற்றியபடியும், திருக்குறள் ஒப்புவித்தபடியும், ரூபிக்ஸ் கியூப்புகளை சமன்படுத்தி மாணவ - மாணவியர் அசத்தினர். மேலும், 20 நிமிடங்களில், 35 மாணவர்களால், 7,000 கணக்குகள் போடும் சாதனையும் நிகழ்த்தப்பட்டது.

அதன்படி, ஒன்பது தனி நபர் மற்றும் ஒரு குழு சாதனை, லிங்கன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. அதற்கான, அங்கீகார சான்றிதழ், பதக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதில், பாரதி ராமகிருஷ்ணன், லிங்கன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட் தலைவர் ஜோசப் இளந்தென்றல், அகாடமி நிர்வாகி ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us