/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால இறக்கத்தில் அத்துமீறல் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
/
மேம்பால இறக்கத்தில் அத்துமீறல் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
மேம்பால இறக்கத்தில் அத்துமீறல் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
மேம்பால இறக்கத்தில் அத்துமீறல் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
ADDED : மே 25, 2024 06:20 PM

அமைந்தகரை:
அண்ணா ஆர்ச் மேம்பால இறக்கத்தில், அத்துமீறி நிறுத்தப்படும் 'ஷேர்' ஆட்டோக்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அண்ணா நகர் மண்டத்திற்குட்பட்ட, அண்ணா நகர் ஆர்ச் அருகில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் அண்ணா மேம்பாலம் உள்ளது. அண்ணா நகரில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாகவும், மற்றொரு வழியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து அண்ணா நகருக்கு வழியாகவும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் வழியில், அண்ணா நகருக்கும், மீண்டும் இடது புறமாக திரும்பி அண்ணா வளைவு நோக்கியும் வழிகள் உள்ளன.
அண்ணா நகர் பகுதியில், 'ஷேர்' ஆட்டோக்கள் பயன்பாடு அதிகம். இதனால், மேம்பாத்தின் கீழ் பகுதியில், அத்துமீறி ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் 'பார்கிங்' போல நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, மேம்பாலத்தில் இருந்து, அண்ணா வளைவு நோக்கி வளைந்து இறங்கும் பகுதியில், 'ஷேர்' ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால், மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்கள், ஆட்டோக்களை கண்டு தடுமாறி, விபத்திலும் சிக்கி வருகின்றன.
போக்குரவத்து போலீசார் கண்காணித்து, மேம்பாலத்தை சுற்றி தேவையின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.