/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை ஆக்கிரமிப்பு செங்குன்றத்தில் அவதி
/
சாலை ஆக்கிரமிப்பு செங்குன்றத்தில் அவதி
ADDED : மே 30, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில், ஜி.என்.டி., சாலையை காய்கறி, மாம்பழம், இளநீர், செருப்பு விற்கும் கடைகள் என, 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றைக் கடந்து, பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை. அதே அளவிற்கு ஆட்டோக்களும், பேருந்தில் ஏறி இறங்க முடியாத நிலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. எங்களை போன்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் மிகவும் கஷ்டப்பட்டு சென்று வருகிறோம். எங்களுக்கு உதவ, அங்கு போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை.
- தேவகியம்மாள், தீர்த்தகிரையம்பட்டு, செங்குன்றம்.