/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையால் சகதியான சாலைகள் வளசரவாக்கம் மண்டலத்தில் அவதி
/
மழையால் சகதியான சாலைகள் வளசரவாக்கம் மண்டலத்தில் அவதி
மழையால் சகதியான சாலைகள் வளசரவாக்கம் மண்டலத்தில் அவதி
மழையால் சகதியான சாலைகள் வளசரவாக்கம் மண்டலத்தில் அவதி
ADDED : ஜூலை 12, 2024 12:50 AM

வளசரவாக்கம், சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால், அப்பகுதிமக்கள் அவதிப்பட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதில், விரிவாக்கப்பட்ட மண்டலமான வளசரவாக்கம் மண்டலத்தில், 150வது வார்டு செட்டியார் அகரம் பிரதான சாலை, காரம்பாக்கம் மகாலட்சுமி நகர் ஆகிய சாலைகள், சேறும் சகதியுமாக மாறின.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவானது. அத்துடன், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்பட்டன.
எனவே, மண் சாலையாக உள்ள வளசரவாக்கம் மண்டல சாலைகளை, அடுத்து வரும் மழைக்காலத்திற்கு முன் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல், கோடம்பாக்கம் மண்டலம், மாம்பலம் ரயில்வே பார்டர் சாலையில் உள்ள சந்தை பகுதியும், சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், சந்தையில் பொருட்கள் வாங்க வந்த நுகர்வோர் மற்றும் மாம்பலம் ரயில் நிலையம் வந்த பயணியரும் அவதிப்பட்டனர்.
அதேபோல், வடபழனி பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.

