/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி 'சம்பவம்' செந்திலின் கூட்டாளி சிக்கினார்
/
ரவுடி 'சம்பவம்' செந்திலின் கூட்டாளி சிக்கினார்
ADDED : ஆக 24, 2024 12:16 AM
சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ரவுடி 'சம்பவம்' செந்திலின் கூட்டாளி, துபாயில் இருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் ரவுடிகள் செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோர் பதுங்கி இருக்கும் இடத்தை தனிப்படை போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.
இந்நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், துபாயில் இருந்து நேற்று காலை 5:00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது குறித்து, தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இவர் ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளி. செந்திலுக்கு வீடு எடுத்து தருவது முதல் அவருடன் நிழலாக செயல்பட்டு வந்தவர்.
திருவேங்கடம் சென்னை திரும்பியதை அடுத்து, அவரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியது, செந்தில் பதுங்கியுள்ள இடம் குறித்தும், இந்த கொலையில் திருவேங்கடத்தின் தொடர்பு குறித்தும் விசாரிக்கின்றனர்.