/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை; போதை தகராறில் நண்பர்கள் வெறி
/
ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை; போதை தகராறில் நண்பர்கள் வெறி
ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை; போதை தகராறில் நண்பர்கள் வெறி
ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை; போதை தகராறில் நண்பர்கள் வெறி
ADDED : ஆக 12, 2024 10:47 PM

சென்னை : தண்டையார்பேட்டை, பாலகிருஷ்ணன் தெருவில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்தவர் திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த லோகேஷ், 32, என்பதும், ரவுடியாக வலம் வந்த இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் மதியம் தண்டையார் பேட்டை, பாலகிருஷ்ணா தெருவில் லோகேஷ், தன் நண்பர்களான புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ், 38, வினோத்குமார், 27, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சோபன்ராஜ், 32, விக்கி, 25, ரிச்சர்டு ஹார்ட்லி, 33, முகிலன், 37, ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது 'கானாங்கத்த' ராஜ் என்பவருக்கும் லோகேஷின் நண்பர் பிரகாஷுக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. கானாங்கத்த ராஜுக்கு ஆதரவாக லோகேஷ் பேசியதாக தெரிகிறது.
மேலும், பிரகாைஷ தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு இடையே அடிதடி ஏற்படவே, நண்பர்கள் விலக்கி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக,பிரகாஷ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்துஇக்கொலையை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வினோத் குமார், சோபன்ராஜ், விக்கி, ரிச்சர்டு ஹார்ட்லி, முகிலன் ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரிக்கின்றனர். தலைமறைவான பிரகாைஷ தேடி வருகின்றனர்.