/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 13 லட்சம் மோசடி திருநங்கையர் மறியல்
/
ரூ. 13 லட்சம் மோசடி திருநங்கையர் மறியல்
ADDED : மே 28, 2024 12:13 AM
பெருங்களத்துார், தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர், 1 சென்ட் இடம், 3.30 லட்சம் என, 10 சென்ட் நிலத்தை தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த இடத்தை திருநங்கைகளுக்காக பெறுவதற்காக வசூலித்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் 13 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இடம், தற்போது வேறு ஒரு நபருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த, 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள், நேற்று மதியம், நெடுங்குன்றம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பீர்க்கன்கரனை போலீசார் விரைந்து பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.