/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'
/
ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 05, 2024 12:39 AM

திருவள்ளூர், திருவள்ளூர், ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி, 45. அதே பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார். கடையை விரிவுபடுத்த, 2022ல், மாவட்ட தொழில் மையத்தை அணுகி, மத்திய அரசு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றார்.
இதற்கான 50,000 ரூபாய் மானியத்தை பெற, ஓராண்டுக்கும் மேலாக, மாவட்ட தொழில் மையத்தை அணுகியுள்ளார்.
அம்மையத்தின் உதவியாளர் சிவகுமார், 47, மானியத்தை விடுவிக்க 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதில் உடன்படாத குமாரசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி, மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவகுமாரிடம், ரசாயன பவுடர் துாவப்பட்ட 2,500 ரூபாயை, குமாரசாமி கொடுத்தார்.
அதை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார், சிவகுமாரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.