/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'
/
ரூ.2.66 லட்சம், ஐ - போன் புளியந்தோப்பில் 'ஆட்டை'
ADDED : மே 13, 2024 01:55 AM
புளியந்தோப்பு,:சென்னை, ஏழுகிணறு, 7வது தெருவைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா, 44; ஏழுகிணறு பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இறைச்சி வாங்க, புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்திற்கு சென்றார்.
அப்போது, 2.66 லட்சம் ரூபாய் மற்றும் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஐ - போன்' ஆகியவற்றை, தன், இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து சென்றார்.
இறைச்சி வாங்கிய பின், பணம் எடுப்பதற்காக, அதிகாலை 4:50 மணிக்கு வாகனத்தை பார்த்த போது, 'சீட்' லாக் உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மொபைல்போன் திருடு போனது தெரிந்தது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடன் கைது
புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சேகர், 45; ஆட்டிறைச்சி கூட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு நடந்து சென்றபோது, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்த கார்த்தி, 26, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, சேகரிடம் இருந்து, 620 ரூபாயை பறித்தார்.
மேலும் அவரை பிடிக்க சென்றவர்களையும் கத்தியை காட்டி மிரட்டினார். தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார், அங்கு சென்று, அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.