/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பங்கு சந்தை ஆசைக்காட்டி ரூ.29.06 கோடி மோசடி
/
பங்கு சந்தை ஆசைக்காட்டி ரூ.29.06 கோடி மோசடி
ADDED : ஜூலை 03, 2024 12:17 AM

ஆவடி, சென்னை கொரட்டூர், வாட்டர் கெனால் சாலையில் வசிப்பவர் அஸ்வத், 32. 'எஸ்.பி.கே.எக்ஸ்போர்ட்' என்ற பெயரில், வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்.
கடந்த ஏப்ரல் 4 ம் தேதி, அவரது இன்ஸ்டாகிராமில் 'ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்' என்ற பெயரில் விளம்பரம் ஒன்று வந்தது. அதை ஆர்வமுடன் பார்த்ததால், அஸ்வத்தை சில மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர்.
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவர்களை நம்பி, அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் 29.06 கோடி ரூபாயை அஸ்வத் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு வர வேண்டிய கமிஷன் மற்றும் முதலீடு தொகையை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஸ்வத் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார், மோசடிக்காரர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை கொண்டு, சென்னை, திருவல்லிக்கேணி, கானா பாக் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், 34 என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி, முகமது இப்ராஹிம் பல கோடி ரூபாய் சுருட்டியது தெரிய வந்தது.
போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.