/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.45 கோடி மோசடி: குற்றவாளிக்கு வலை
/
ரூ.45 கோடி மோசடி: குற்றவாளிக்கு வலை
ADDED : ஆக 13, 2024 12:35 AM
சென்னை, புரசைவாக்கத்தில், 'புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனர்களாக, சென்னையைச் சேர்ந்த மோகன், சுப்ரமணியன் மற்றும் வெங்கடராமன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 564 பேரிடம் 45 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மோகன், சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய புள்ளியான வெங்கடராமன் தலைமறைவாக உள்ளார். அவரை, டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நேற்று தேடினர்.
வெங்கடராமன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கும் தகவல் 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

