/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமுடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
/
தலைமுடி வியாபாரிகளிடம் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 29, 2024 12:30 AM
புழல், மாதவரம் தொகுதி தேர்தல் கண்காணிப்பு படையினர், நேற்று அதிகாலை புழல் மத்திய சிறைச்சாலை - தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட, 'இனோவா' காரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் பயணித்தவர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜு ஜெகன்னாதன், தாசரி வெங்கடேஸ்வரா ராவ், ராமகோட்டால ஜெகன்னாதன் என்பதும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தலை முடிகளை சேகரித்து, சென்னையில் உள்ள, 'விக்' தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கும் தொழில் செய்து வருவதும் தெரிவந்தது.
அவர்களிடம், உரிய ஆவணமின்றி இருந்த 4.50 லட்சம் ரூபாயை, கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்து, மாதவரம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். தலைமுடி விற்ற பணத்தை பறிகொடுத்த வியாபாரிகள் பரிதாபமாக, ஆந்திரா திரும்பினர்.
அதிகாரியிடம் ரூ.1.50 லட்சம்
திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலையில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேச சிவநாதன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, திருவல்லிக்கேணி, குப்புமுத்து தெருவைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த அதிகாரி லட்சுமி கீர்த்திகா, 30, என்பவர் காரில் வந்தார்.
அப்போது, பறக்கும் படையினர் அவரது காரை சோதனையிட்டபோது, உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

