/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெல்லை நபர் மீது ரூ.60 லட்சம் மோசடி புகார்
/
நெல்லை நபர் மீது ரூ.60 லட்சம் மோசடி புகார்
ADDED : மே 12, 2024 12:12 AM
பெரம்பூர், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது, 48. கடந்த 25 ஆண்டுகளாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர், பெரம்பூரில் உள்ள ஒரு கட்டடத்தின் முதல் தளத்தை, 46 லட்ச ரூபாய்க்கு திருநெல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்தார்.
இதில், 35 லட்சம் ரூபாய் காசோலையாகவும், 11.76 லட்ச ரூபாய் பணமாகவும் பெற்றார். இதையடுத்து, கிருஷ்ணனுக்கு இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
ஆனால், கிருஷ்ணன் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அதேநேரம், பயாஸ் அகமது கிரையம் செய்து கொடுத்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்த கிருஷ்ணன், 25 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அந்தவகையில், மொத்தம் 60 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை தராமலும் கிருஷ்ணன் இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து பயாஸ் அகமது செம்பியம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.