ADDED : பிப் 28, 2025 12:23 AM

திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் வட்டத்தில் அடங்கிய புதுப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண் 63/4ல், 39.50 சென்ட் அரசு நிலம் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலத்திற்கு தனிநபர் பட்டா கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு வருவாய்த் துறை சார்பில், மேற்கண்ட நிலம் கிராம கணக்கில் அரசு புறம்போக்கு, விளையாடும் இடம் என உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு, விளையாட்டு இடம் என, பட்டா வழங்க மறுத்து, தனிநபர் வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி வருவாய்த் துறையினர், மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 8 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.