/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.90 லட்சத்தில் கட்டப்படும் சைதை எம்.எல்.ஏ., அலுவலகம்
/
ரூ.90 லட்சத்தில் கட்டப்படும் சைதை எம்.எல்.ஏ., அலுவலகம்
ரூ.90 லட்சத்தில் கட்டப்படும் சைதை எம்.எல்.ஏ., அலுவலகம்
ரூ.90 லட்சத்தில் கட்டப்படும் சைதை எம்.எல்.ஏ., அலுவலகம்
ADDED : மே 03, 2024 12:32 AM

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு ஜோன்ஸ் சாலையில், சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த எம்.எல்.ஏ., அலுவலகம், மிகவும் குறுகிய இடத்தில் போதிய வசதிகள் இன்றி உள்ளது.
இதையடுத்து, புது எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட, பொதுப்பணித்துறை திட்டமிட்டது.
அதன்படி, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள இடத்தில், எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த எம்.எல்.ஏ., அலுவலகத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், முதல் தளத்தில் கூட்ட அரங்கம், இரண்டாவது தளத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் அமைய உள்ளது.