/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பிராஸ் சார்பில் சமஷ்டி உபநயனம்
/
தாம்பிராஸ் சார்பில் சமஷ்டி உபநயனம்
ADDED : மார் 03, 2025 01:02 AM

மடிப்பாக்கம், தாம்பிராஸ் எனப்படும், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பல்வேறு கிளைகள் சார்பில்,சமஷ்டி உபநயன பிரம் மோபதேசம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மடிப்பாக்கம் கிளை சார்பில், சமஷ்டி உபநயனம் மடிப்பாக்கம், சபரி சாலையில் உள்ள தாம்பிராஸ் டிரஸ்ட் கட்டடத்தில், நேற்று நடந்தது.
உபநயனத்தை முன்னிட்டு, நேற்று காலை உதகசாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, 15 சிறார்களுக்கு பூணுால் அணிவித்து, பிரம்மோபதேசமும் நடந்தது.
உயநயனமான அனைவருக்கும், ஆடைகள், சந்தியா வந்தன நுால், ருத்திராக்ஷம், பிரசாதம் வழங்கப்பட்டது. சிறார்களின்பெற்றோருக்கு, வேஷ்டி, புடவை வழங்கப்பட்டன. நிறைவாக, பாலிகை கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறார்களின் குடும்பத்தாருக்கு, திருமண விருந்து பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மேலாண் டிரஸ்டி பசுபதி நாராயணன், தலைவர் ஜெயராமன், டிரஸ்ட் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.