ADDED : ஆக 13, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மண்டலங்களும் துாய்மை பணியை தனியாருக்கு விடப்படுவதை கண்டித்து, துாய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி பேசுகையில், ''ராயபுரம், திரு.வி.க.நகரை தொடர்ந்து, தண்டையார் பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களும் தனியாரிடம்விடப்படுகின்றன.
''நிரந்தர பணியாளர்கள், அம்பத்துாருக்கு மாற்றப்படுவர் என, தெரிவிக்கின்றனர். தனியார் மையப்படுத்துவதை, அரசு கைவிட வேண்டும்,'' என்றார்.