/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரின் சட்டையை பிடித்தவருக்கு காப்பு
/
போலீசாரின் சட்டையை பிடித்தவருக்கு காப்பு
ADDED : ஆக 25, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசின்பாலம், பேசின்பாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோதிலால் தெருவில், நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மது போதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து பேசின்பாலம் காவல்நிலையத்திலிருந்து நாகமணி பாரதி மற்றும் வினோத்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.
மதுபோதையில் தகராறு செய்த நபரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது, புளியந்தோப்பை சேர்ந்த சக்திவேல், 36 என்பவர் மதுபோதையில், போலீசாரின் சீருடையை பிடித்து தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்த வழக்கில், அவரை கைது செய்தனர்.

