/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்களால் அச்சம்
/
ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்களால் அச்சம்
ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்களால் அச்சம்
ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்களால் அச்சம்
ADDED : ஆக 21, 2024 12:31 AM

அண்ணா நகர், அண்ணா நகரில் உள்ள ஐ.சி.எப்., ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்களால், ரயில் பயணியர் பீதியடைகின்றனர். நாய்களை விரட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்படுகிறது.
காலை, 7:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை, இம்மையம் இயங்குகிறது. இந்த மையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வருகின்றனர்.
ஐ.சி.எப்., ரயில்வே இடத்தில் செயல்படும் இந்த மையம், போதிய பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளிக்கிறது. பழைய குப்பை மற்றும் மரக்கிளைகள் குவிந்து கிடக்கின்றன.தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த மையத்தில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மையத்திலேயே காலை முதல் இரவு வரை, அதிக நாய்கள் சுற்றித் திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன.
இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணியர், பீதியில் செல்கின்றனர். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் மையத்தை துாய்மைப்படுத்தி, இங்கு திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

