ADDED : ஆக 10, 2024 12:25 AM
சென்னை, 'அரசு பள்ளிகளில் பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் கூரை பூச்சு விழுந்து ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம், காஞ்சிபுரம், களக்காட்டூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பில், இனியும் அலட்சியம் காட்டாமல், அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.