/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாடசாலை தெரு விரிவாக்கம் கேள்விக்குறி
/
பாடசாலை தெரு விரிவாக்கம் கேள்விக்குறி
ADDED : ஆக 24, 2024 12:09 AM
மணலி, மணலி மண்டலம் 21வது வார்டு, பாடசாலை தெருவில் 2.64 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இச்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வார்டு கவுன்சிலர் ராஜேஷ் சேகர் மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில், மண்டல அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து, சில வாரங்களுக்கு முன், கணக்கெடுத்து அடையாளப்படுத்தினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் முறையாக 'நோட்டீஸ்' வழங்கினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், உயர் நீதிமன்றத்தை அணுகி, நான்கு வாரம் தடை ஆணை பெற்றதால், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.