/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
/
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ADDED : ஆக 11, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்:போரூர், நியூ காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் சாய் சஞ்சய், 13; 9ம் வகுப்பு மாணவர்.
இவர், தன் நண்பர்களுடன் போரூரில் மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் உள்ள காலி இடத்தில், நேற்று மாலை விளையாட சென்றார். பின், அங்கிருந்த குட்டையில் கை, கால்களை கழுவினார்.
அப்போது, தடுமாறி குட்டையில் விழுந்து மூழ்கினார். பதறிப்போன அவரது நண்பர்கள், அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. போரூர் போலீசார் வந்து அவரை மீட்டபோது, அவர் இறந்தது தெரிய வந்தது.
பின், பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.