ADDED : மார் 13, 2025 12:22 AM

வியாசர்பாடி, தேசிய அறிவியல் தினத்தையொட்டி, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
அரசு பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில், அறிவியல் மாதிரிகள் மற்றும் காட்சி விளக்கங்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டது.
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், ஊட்டச்சத்து மற்றும் மனையியல், உளவியல் ஆகிய துறை மாணவர்கள், அறிவியல் விளக்கங்களை பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர்.
வியாசர்பாடி சுற்றுப்பகுதிகளில் படிக்கும், அரசு பள்ளி மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர், ஆசிரியர்கள் துணையுடன் கண்காட்சியை கண்டு பயன்பெற்றனர்.
மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், '3டி' முப்பரிமாண படமும் காண்பிக்கப்பட்டது.
முன்னதாக, கல்லுாரி முதல்வர் வேணு பிரகாஷ் கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் தேவேந்திரன் செய்திருந்தார்.