/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டர் - பைக் மோதல் ஒருவர் பலி
/
ஸ்கூட்டர் - பைக் மோதல் ஒருவர் பலி
ADDED : ஆக 29, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் சைபுதீன் அகமது, 18; பூந்தமல்லியில் தங்கி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தார். ஆறு மாதத்திற்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் நேற்று, பூந்தமல்லி- குன்றத்துார் சாலையின் எதிர் திசையில்,'ஆக்டிவா' ஸ்கூட்டரில் இவர் சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியே வந்த பஜாஜ் டிஸ்கவர் பைக் மீது மோதியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சைபுதீன் அகமது, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, வழியில் இறந்தார். டிஸ்கவர் பைக்கை ஒட்டி வந்த பாண்டியன்,30, என்பவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

