/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரி செலுத்தாத நிறுவனங்கள் ' சீல் ' வைப்பு
/
வரி செலுத்தாத நிறுவனங்கள் ' சீல் ' வைப்பு
ADDED : மார் 07, 2025 12:20 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில், 13.85 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றில் வரி செலுத்தாதோர் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலம், தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள 'மார்ஸ்' என்ற மென்பொருள் நிறுவனம், ஏழு ஆண்டுகளாக 6.82 லட்சம் ரூபாயை நிலுவை வைத்துள்ளது.
இத்தொகை கட்டாத அந்நிறுவனத்திற்கு, குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று, சீல் வைத்தனர்.
அதேபோல், ஐந்து ஆண்டுகளாக, 5.92 லட்சம் வரி பாக்கி வைத்திருந்த, கோடம்பாக்கம் ஆயுர்வேதிக் கிளினிக்; பார்சன் வணிக வளாகத்தில், 22 ஆண்டுகளாக, 7.19 லட்சம் ரூபாய் வரி செலுத்தாத 'எஸ்.பி.மாத்துார்' ஆகிய நிறுவனங்களுக்கும் 'சீல்' வைத்தனர்.