/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ம.பி.,யில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் 'ஓபியம்' பறிமுதல்
/
ம.பி.,யில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் 'ஓபியம்' பறிமுதல்
ம.பி.,யில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் 'ஓபியம்' பறிமுதல்
ம.பி.,யில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் 'ஓபியம்' பறிமுதல்
ADDED : மே 09, 2024 12:22 AM
ஏழுகிணறு, சென்னை, கொண்டித்தோப்பு, கிருஷ்ணப்பா குளத்தெருவில் ஏழுகிணறு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த, கொண்டித்தோப்பு, கிருஷ்ணப்பா குளத்தெருவைச் சேர்ந்த ஹர்தேவ்ராம், 43 என்பவரிடம் விசாரித்தனர்.
அவரை சோதனையிட்ட போது, 'ஓபியம்' போதைபொருள் இருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட மறைமலை நகர், அண்ணா சாலை, கம்பர் தெருவைச் சேர்ந்த தேவராம், 36 மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹத்திராம், 31 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள 3.6 கிலோ ஓபியம் போதைப் பொருள் மற்றும் 2 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஹத்திராம், தேவராம் ஆகியோர் மாதம் ஒருமுறை மத்திய பிரதேசத்தில் இருந்து, ஓபியம் போதைப் பொருளை 1 கிலோ 70,000 ரூபாய்க்கு மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில், கிலோ 1.5 லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை விற்றுள்ளனர்.
இதையடுத்து, மூவரையும் ஏழுகிணறு போலீசார் கைது செய்தனர்.