/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிய ஆவணம் இல்லாத ரூ.9 லட்சம் பறிமுதல்
/
உரிய ஆவணம் இல்லாத ரூ.9 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 03, 2024 12:25 AM
ஆர்.கே.நகர், சென்னை, சுங்கச்சாவடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் நேற்று வாகன சோதனை நடந்தது.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை செய்ததில், உரிய ஆணவங்கள் இன்றி, 3 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த ரவீந்திரகுமார், 52, என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், ராயபுரம், மன்னார்கோவில் தெருவில் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராயபுரம், ராமநாயக்கன் தெருவைச் சேர்ந்த அருண், 30, என்பவர், உரிய ஆணவங்கள் இன்றி எடுத்து வந்த, 3 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட குன்றத்துாரில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் பயணித்த டேனியல் என்பவர் உரிய ஆவணங்களின்றி, 2.87 லட்சம் ரூபாய் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

