/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் திருநின்றவூரில் அவலம்
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் திருநின்றவூரில் அவலம்
ADDED : பிப் 10, 2025 02:50 AM

திருநின்றவூர்:திருநின்றவூர் நகராட்சி, 4வது வார்டு, என்.ஜி.ஜி.ஓ., காலனி முதல் பிரதான சாலையில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை, பல மாதங்களாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், நோய் தொற்று ஏற்படுவதோடு, பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
இது குறித்து பகுதிவாசிகள் மற்றும் வார்டு உறுப்பினர் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் செய்வதால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.